பிரபல ஆசிரியர் திரு. குணசீலன் அவர்களுக்கு கனடாவில் உயர்ந்த கௌரவம்!


திரு. சின்னத்தம்பி குணசீலன் அவர்கள் இகுருவி நிறுவனத்தின் அழைப்பை ஏற்று கனடாவுக்கு வருகை தந்துள்ளார் அத்தகைய புகழ்பூத்த கல்வியாளரை இகுருவி நிறுவனத்தினருடன் சேர்ந்து கனடா உறவுகள் அனைவரும் அன்புடன் வரவேற்பதில் பெருமையடைகின்றனர்.

Posted on:
2017-03-31 02:30:21

ஆசிரியர் குணசீலன் அவர்கள் இன்று கனடா சென்றடைந்தார்

 

இகுருவி விருது விழா மற்றும் , புதிய வெளிச்ச நிகழ்வுகளில் கலந்து கொள்ள சுமார் 40,000 க்கும் அதிகமான மருத்துவ கலாநிதிகள், பல் வைத்திய கலாநிதிகள், விலங்கு மருத்துவ கலாநிதிகள், விவசாய சிறப்புப் பட்டதாரிகள், விஞ்ஞானப் பட்டதாரிகள் எனப் பல கல்வியாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராக விளங்கும் திரு. சின்னத்தம்பி குணசீலன் அவர்கள் இன்று கனடா வந்து சேர்ந்தார் .17546877_1431954303530070_4109444932896837912_o17620400_1431956126863221_186460048766893113_o17620477_1431955850196582_4146685552351156094_o17621721_1431955846863249_3528764124711539035_o17621797_1431956120196555_9028321110300059762_o17621930_1431956463529854_1543402830157456420_o17632104_1431954496863384_7571299179747369802_o17632301_1431955843529916_4552110121177779519_oதிரு. சின்னத்தம்பி குணசீலன் அவர்கள் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா என தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புகழ்பூத்த தாவரவியல் ஆசானாக விளங்குவதுடன் ஆசிரியர் சேவை தரம் 1 ற்குப் பதவி உயர்த்தப்பட்டு தற்பொழுது கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் உயிரியல் பாடத்திற்கான சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி இதுவரை பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்கி வந்திருக்கின்றார். மாணவர்களுடனும் தனது சக ஆசிரியர்களுடனும் அன்பாகப் பழகிவரும் திரு. சின்னத்தம்பி குணசீலன் அவர்கள் இகுருவி நிறுவனத்தின் அழைப்பை ஏற்று கனடாவுக்கு வருகை தந்துள்ளார் அத்தகைய புகழ்பூத்த கல்வியாளரை இகுருவி நிறுவனத்தினருடன் சேர்ந்து கனடா உறவுகள் அனைவரும் அன்புடன் வரவேற்பதில் பெருமையடைகின்றனர்.